ADDED : அக் 10, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்:திருமங்கலம் தாலுகா பெரிய வாகைக்குளத்தில் விநாயகர் கோயில், சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. அப்போது பெரிய, சின்ன வாகைக்குளம் கிராம மக்கள் இணைந்து வரி வசூலித்தனர். இதற்கான கணக்கு விவரங்கள் பெரிய வாகைக்குளத்தைச் சேர்ந்தவர்களிடம் உள்ளது.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி பொங்கல் கும்பிடும் முன், கணக்குகளை காட்ட வேண்டும் என சின்ன வாகைக்குளம் மக்கள் கேட்டனர்.
இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால், நேற்று சின்ன வாகைக்குளம் மக்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இன்று (அக். 10) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.