/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாம்பரம்-கன்னியாகுமரி கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்
/
தாம்பரம்-கன்னியாகுமரி கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்
ADDED : டிச 22, 2024 07:03 AM
மதுரை, : கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிச., 24, 31ல் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 12:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06039) அன்று மதியம் 12:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கத்தில் டிச., 25, ஜன., 1ல் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06040) மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இவ்விரு ரயில்களும் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.
இன்று (டிச., 22) காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.