ADDED : அக் 30, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் தமிழ்க்கூடல் கருத்தரங்கு நடந்தது.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் பேசுகையில், ''கர்நாடகா கோலார் மாவட்டம் குவலாளபுரத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய சவிநிர்மாடி என்ற பெண்ணின் நடுகல் கிடைத்துள்ளது.
படித்தவர்களுக்கு நடுகல் வைத்த சமூகம் நம்முடையது. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் அதிகம் கிடைத்தது மண்பாண்டங்கள்.
அதன் நன்மை கருதியே தமிழர்கள் பயன்படுத்தினர். சில்வர் பயன்படுத்திய பின்னரே நோய்கள் பெருகியுள்ளன'' என்றார்.
ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.

