/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வியில் தமிழகம் முதலிடமா முதல்வர் பொய் சொல்கிறார் உதயகுமார் கண்டுபிடிப்பு

ADDED : செப் 27, 2025 04:18 AM
மதுரை: மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறியதாவது: இன்றைக்கு கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு போதைப் பொருளுக்கு அடிமையாகி தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்றும் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் பேசியுள்ளார்.
தற்போது பள்ளி அருகே மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்று வருவது கவலை அளிக்கிறது. இந்தியாவிலே தமிழகத்தில் போதை பழக்கங்கள் அதிகரித்துள்ளது என்று ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அதை மூடி மறைக்க, திசை மாற்றம் செய்வதற்காக தொடர்ந்து பாராட்டு விழாக்களை முதல்வர் நடத்தி வருகிறார்.
உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். அப்போது முதல்வர் அரியணை ஸ்டாலினுக்கு சொந்தமாக இருக்காது. இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிய இந்த ஆட்சியாளரின் எதிர்காலத்தை மக்கள் கேள்விக்குறியாக வேண்டும் என்றார்.