/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்'
/
'குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்'
'குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்'
'குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்'
ADDED : ஜன 05, 2024 05:39 AM

இடைப்பாடி : ''தமிழகத்தில் உழைக்காமல் கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் சாப்பிடுகிறது. இங்கு குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி, வெள்ளாண்டிவலசில் இருந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மழையில் நனைந்தபடி காந்தி நகர், அம்மன் நகர், நைனாம்பட்டி வழியே, 1 கி.மீ.,க்கு நடந்து சென்றார். அவருடன் ஏராளமான தொண்டர்களும் சென்றனர். பின் பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுதிர் முருகன் தலைமை வகித்தார்.
அதில் மழையில் நனைந்தபடியே அண்ணாமலை பேசியதாவது:
நாட்டில் குடும்ப ஆட்சியை உடைக்க, பிரதமர் மட்டும் விரும்புகிறார். தமிழகத்தில் உழைக்காமல், கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் சாப்பிடுகிறது. இங்கு குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும்.
இங்குதான், 30க்கும் மேற்பட்ட தந்தை, மகன்கள், எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். 3ம் முறை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுதும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி, மாவட்ட பொதுச்செயலர் ஹரிராமன், மாவட்ட செயலர் ஐயப்பராஜ், மாவட்ட துணை தலைவர்கள் பாலமுருகன், நித்தியகலா, ஓ.பி.சி., அணி மாவட்ட செயலர் குமார், நகர தலைவர் சந்திரன், ஆடிட்டர் பரமேஸ்வரன், தொழிற்நுட்ப பிரிவு சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.