ADDED : செப் 27, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
மேலுார்: அரியப்பன்பட்டியை சேர்ந்த முன்னமலை 52, வெள்ளநாதன்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
நேற்று இரவு கடைக்கு டூவீலரில் வந்த இருவர் மது வாங்கினர். பீர் பாட்டில் குளிர்ச்சியாக இல்லாததால் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த முன்னமலை, மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
