நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தாட்கோ, தனியார் நிறுவனம் சார்பில் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., பிரிவு இளைஞர்களுக்கு திருச்சியில் ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் (டாட்டூ) பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மூன்று மாத கால பயிற்சியின் போது திருச்சியில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ வழங்கும்.
பயிற்சி முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com ல் பதிவு செய்யலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

