/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு; மேயரின் கணவர் சென்னையில் கைது * துாத்துக்குடி உதவி கமிஷனரும் சிக்கினார்

ADDED : ஆக 13, 2025 01:59 AM

மதுரை; மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி வரி முறைகேடு புகார் தொடர்பாக தி.மு.க., மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை தனிப்படை போலீசார் நேற்றிரவு சென்னையில் கைது செய்தனர்.
இம்முறைகேடு தொடர்பாக துாத்துக்குடி மாநகராட்சி உதவி கமிஷனர் சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டார்.
வரி முறைகேடு தொடர்பாக முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார் புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாநகராட்சி உதவி கமிஷனர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், ஓய்வு உதவி கமிஷனர் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் தி.மு.க., வைச் சேர்ந்த 5 மண்டல, 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
மதுரையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து தற்போது துாத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் சுரேஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இவர் 2023, 2024 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் மண்டலம் 3, 4ல் கூடுதல் பொறுப்பாக உதவி கமிஷனர் - கணக்கு, மற்றும் மாநகராட்சி மன்ற கூட்ட செயலர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார். மதுரையைச் சேர்ந்தவர் இவர்.
இதற்கிடையே, சென்னையில் ஆளுங்கட்சி தரப்பை பார்த்து புகாரில் இருந்து தப்பிக்க முகாமிட்டிருந்த மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
இன்று காலை மதுரை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுவரை கைது 17 இம்முறைகேடு தொடர்பாக உதவி கமிஷனர், பில் கலெக்டர், ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.