/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சிகளில் 'வரி உயர்த்தியாச்சு; வீட்டு வாடகை உயரல' ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தி
/
மாநகராட்சிகளில் 'வரி உயர்த்தியாச்சு; வீட்டு வாடகை உயரல' ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தி
மாநகராட்சிகளில் 'வரி உயர்த்தியாச்சு; வீட்டு வாடகை உயரல' ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தி
மாநகராட்சிகளில் 'வரி உயர்த்தியாச்சு; வீட்டு வாடகை உயரல' ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தி
ADDED : மே 13, 2025 12:49 AM
மதுரை : தமிழகத்தில் மாநகராட்சி எல்லைகளில் பணியாற்றும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் உயர்த்தப்பட்ட வரியை செலுத்திய நிலையில், அவர்களுக்கு அரசு வழங்கும் வீட்டு வாடகை, நகர ஈட்டுப்படி உள்ளிட்ட சலுகைகள் 7 ஆண்டுகளாக திருத்தியமைக்கப்படவில்லை என புலம்புகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்போருக்கு வீட்டு வாடகை படி, நகர ஈட்டுப்படி உள்ளிட்ட சலுகைகள் அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊதியக் குழுவிலும் இதற்கான தொகை உயர்த்தி நிர்ணயிக்கப்படும். இதன்படி 2017ல் ஏழாவது ஊதியக் குழுவில் இதற்கான திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி சென்னை மாநகராட்சியில் (கிரேடு 1ஏ) 32 கிலோ மீட்டருக்குள் வசிப்போருக்கு வீட்டு வாடகை ரூ.4200 முதல் 8300 வரையும், நகர ஈட்டுப்படி ரூ.360 முதல் 1200 வரை நிர்ணயிக்கப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு (கிரேடு 1 பி) மாநகராட்சிகளில் 16 கிலோ மீட்டருக்குள் வசிப்போருக்கு வீட்டு வாடகை ரூ.2600 முதல் அதிகபட்சமாக 4300 எனவும், நகர ஈட்டுப்படி ரூ. 180 முதல் 720 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதுபோல் கிரேடு 2, கிரேடு 3 என நகராட்சி, பேரூராட்சி எல்லைக்கு உட்பட்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.
திருத்திய உத்தரவு வெளியிடாத நிதித்துறை
ஆனால் 2017 க்கு திருத்தப்பட்ட உத்தரவு, நிதித்துறை சார்பில் வெளியிடப்படாததால் திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார், தஞ்சாவூர், திண்டுக்கல், ஒசூர், நாகர்கோவில், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலுார், கும்பகோணம், சிவகாசி, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டும் அதற்கான வீட்டு வாடகை, நகர ஈட்டுப்படி இதுவரை கிடைக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபோல் தேர்வுநிலை நகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்தந்த உள்ளாட்சிக்கு ஏற்ப உயர்த்தப்படவில்லை. ஆனால் 2017 க்கு பின் மாநகராட்சி, நகராட்சி என உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட வீடு, சொத்து உள்ளிட்ட வரிகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் செலுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் வரி உயர்த்தப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்காமல் செலுத்துபவர்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும். ஆனால் அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகை என்பது பல வழிகளில் தடுக்கப்படுகிறது. நிதித்துறை சார்பில் இதுகுறித்து திருத்தப்பட்ட உத்தரவை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.