/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரிவிதிப்பு முறைகேடு: நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
/
வரிவிதிப்பு முறைகேடு: நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வரிவிதிப்பு முறைகேடு: நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வரிவிதிப்பு முறைகேடு: நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 12:32 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயிப்பதில் முறைகேடு குறித்து விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்ததாவது: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயிப்பதில் முறைகேடு தொடர்பாக தற்போதைய, முன்னாள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ல் அப்போதைய கமிஷனர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என கேள்வி எழுகிறது. முறைகேட்டில் பெரிய வலைப்பின்னல் உள்ளது.
சொத்து வரி, குடிநீர், பாதாளச் சாக்கடை கட்டணம், குப்பை வரி ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த உயர்வை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நிதிப் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வை தவிர்க்க முடியாது என கூறுவது ஏற்புடையதல்ல.
மருத்துவமனை, பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை என்கிறது மாநகராட்சி நிர்வாகம். துாய்மைப்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்பணியாளர்களுக்கு நியாயமான சம்பளம் தருவதில்லை. மறுபுறம் வரி விதிப்பில் மோசடி, நிதி இழப்பு தொடர்கிறது. இதை பலமுறை மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டியும் மாநகராட்சி கவனத்தில் கொள்ளவில்லை.
மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுதித்திய அனைவரிடமும் விசாரிக்க வேண்டும். மோசடி செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியாக வரி விதிப்பு பெற்ற கட்டடங்கள் குறித்து மறு மதிப்பீடு செய்து முழுமையான வரிவிதிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.