ADDED : அக் 28, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராமகிருஷ்ணன் 48. இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அங்குள்ள அறையை ஒரு மாணவி தனியாக சுத்தம் செய்தபோ து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ராமகிருஷ்ணன் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல் பிறப்பித்த உத்தரவு: ராமகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

