/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது மாறுதல் கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்த வேண்டும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
/
பொது மாறுதல் கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்த வேண்டும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பொது மாறுதல் கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்த வேண்டும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பொது மாறுதல் கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்த வேண்டும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 23, 2025 02:44 AM
மதுரை:'கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்தி முடிக்க வேண்டும். மாறுதலில் முன்னுரிமை கோருவோரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வழக்கமாக ஆகஸ்டை தாண்டி விடுகிறது. இது ஆக.,1 ன் படி ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம் அடிப்படையில் 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்படும் என்றாலும், பள்ளி துவங்கி 2 மாதங்களுக்கு பின் இதுபோல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்கின்றனர்.
கல்வியாண்டின் நடுவில் மற்றொரு பள்ளிக்கு மாறிச்செல்வது, குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட தனிப்பட்ட, குடும்ப சூழல் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தாண்டு ஜூனிற்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒருமுறை கலந்தாய்வில் பங்கேற்றால் ஓராண்டுக்கு பின் தான் பங்கேற்க வேண்டும் என்ற பொது நிபந்தனையை இந்த கலந்தாய்விலும் விதிக்க கூடாது. ஒவ்வொரு கலந்தாய்விலும் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர், பார்வையற்றோர், கணவன் - மனைவி மாறுதல் (ஸ்பவுஸ்) உட்பட பல பிரிவுகளில் 50 சதவீதம் வரை முன்னுரிமை பெறுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமையை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பொதுப்பிரிவில் உள்ளோர் பல ஆண்டுகளாக போதிய மாறுதல் பெற முடியாமல் தவிக்கின்றனர். சிறப்பு பிரிவினருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை முறை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் தேவையில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமையை சிலர் தவறாக பயன்படுத்தி 'பலன்' பெறுகின்றனர். அவர்களின் உண்மை தன்மை அறிந்து முன்னுரிமையை அனுமதிக்கும் வகையில் நிபந்தனை விதிக்க வேண்டும் என்றனர்.