/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிகளில் நலத்திட்டங்களை நேரடியாக சேர்க்க வேண்டும் ஆசிரியர்கள் தீர்மானம்

ADDED : ஜூன் 21, 2025 12:24 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் கர்ணன் முன்னிலை வகித்தனர். பிரசார செயாளர் முரளி, இணைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் தமிழ்க்குமரன் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பேசியதாவது: திருவண்ணாமலை மாநில பொதுக்குழுவில் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை எடுத்து செல்லும் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.
உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களே செலவு செய்து நலத் திட்டங்களை எடுத்துச் செல்கின்றனர். இதற்கு முடிவுகட்டி, பள்ளிகளில் நேரடியாக நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். பல பள்ளிகளுக்கு திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கான பாடப் புத்தகங்களும் வழங்கவில்லை. இவற்றை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.