/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்னையை கருக செய்யும் வெள்ளை ஈ விவசாயிகள் கண்ணீர்
/
தென்னையை கருக செய்யும் வெள்ளை ஈ விவசாயிகள் கண்ணீர்
தென்னையை கருக செய்யும் வெள்ளை ஈ விவசாயிகள் கண்ணீர்
தென்னையை கருக செய்யும் வெள்ளை ஈ விவசாயிகள் கண்ணீர்
ADDED : பிப் 18, 2025 05:21 AM

கொட்டாம்பட்டி: மேலவளவில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ பரவுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இலையின் அடிப்பகுதியில் 10 நாட்கள் தங்கி இலையின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, 45 நாட்களில் கூடு கட்டி முட்டையிட்டு வெள்ளை ஈ இனப்பெருக்கம் செய்கிறது. அதனால் தென்னையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் கருக ஆரம்பித்துள்ளன.
விவசாயி பிச்சை: ரூகோஸ் சுருள் என்ற வெள்ளை ஈக்களால் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களின் இலை, பாலை, குரும்பை, இளநீர், தென்னை மட்டைகள், மரங்கள் கருக ஆரம்பித்துள்ளன. கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் தென்னை மரங்கள் பட்டுப் போவதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்பை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி குழவிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

