/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
/
கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : அக் 31, 2024 02:44 AM
மதுரை: மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் மின்னணு தகவல் தொடர்புத் துறை சார்பில் 'ரெப்ளசிர் 25' எனும் தொழில்நுட்பக் கருத்தரங்கு நடந்தது.
தலைவர் கார்த்திக் தலைமை வகித்து தொழில்நுட்ப இதழ் பிரதியை வெளியிட்டார். மாணவி கோபிகா வரவேற்றார். 3டி கிராப்ட்ஸ் நிறுவனர் விஷால் சிவக்குமார் கருத்துரை வழங்கினார். மாணவர் ராம் சூர்யா நன்றி கூறினார்.
மாநில அளவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களின் யோசனைகளை முன்வைத்தனர். செயலாளர் கணேஷ், முதல்வர் ராம்பிரசாத், துறைத் தலைவர் கெஜலட்சுமி பங்கேற்றனர். பேராசிரியர்கள் சிவபிரகாஷ், சுபா, மீனா, சசிரேகா ஏற்பாடுகளை செய்தனர். மாணவிகள் வாகீஸ்வரி காயத்ரி, விஜி, சஷ்டி தொகுத்து வழங்கினர்.

