sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'உங்க கனவ சொல்லுங்க' மதுரையில் திட்டம் துவக்கம்

/

 'உங்க கனவ சொல்லுங்க' மதுரையில் திட்டம் துவக்கம்

 'உங்க கனவ சொல்லுங்க' மதுரையில் திட்டம் துவக்கம்

 'உங்க கனவ சொல்லுங்க' மதுரையில் திட்டம் துவக்கம்

1


ADDED : ஜன 10, 2026 07:48 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருப்பாலை யாதவர் கல்லுாரியில் தமிழக அரசின் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டம் துவக்க விழா அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.

அவர் பேசியதாவது: இத்திட்டம் மூலம் ரேஷன் கார்டு அடிப்படையில் கணக்கெடுத்து 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு தனிநபருக்கும், குடும்பத்திற்கும் ஏற்படும் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் போன்றவற்றை கண்டறிவர். அரசு நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, எந்தளவில் அது மக்களை சென்றடைந்துள்ளது, திட்டங்களின் செயல்திறன், தாக்கம், மக்களின் தேவைகள், முன்னுரிமையை கண்டறிதல் போன்ற புதிய முயற்சிகளுக்கு இக்கணக்கெடுப்பு உதவும்.

மாவட்டத்தில் மொத்தம் 8.83 லட்சம் குடும்பங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு 500 குடும்பங்களுக்கு ஒருவர் வீதம் 1930 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க 836 பேர் தேர்வாகி உள்ளனர். குடும்பங்கள் தோறும் படிவங்கள் வழங்கி பூர்த்தி செய்த படிவங்கள் அலைபேசி செயலியில் சேகரித்து பதிவேற்றம் செய்யப்படும். அதேநேரம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இணையவழி பதிவு எண்ணை கனவு அட்டையில் பதிவிட்டு வழங்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் பெற்ற, பெறவேண்டிய திட்டங்களை அறிய முடியும் என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரவீன்குமார், மகளிர் திட்ட இயக்குனர் தமிழரசி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us