ADDED : ஆக 31, 2026 01:19 AM

பேரையூர்: பேரையூர் தாலுகா சலுப்பபட்டி அக்னி வீராண்டாள் திருக் கோயில் ராஜகோபுரம் நன்னீராட்டு விழா தொழிலதிபர் மதுரை சுகன்யா குரூப் ஆப் கம்பெனீஸ் நிறுவனர் கள்ளக்குறிச்சி ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் பங்காளிகள் தலைமையில் நேற்று நடந்தது.
சலுப்பபட்டி, சின்னகட்டளை, எஸ்.பாப்பி நாயக்கன்பட்டி, விளத்துார், வெள்ளிக் குறிச்சி, டி.மீனாட்சிபுரம், சங்கரலிங்கபுரம், தொட்டானம்பட்டி, பழையூர், துள்ளுக்குட்டிநாயக்கனுார், வீரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பங்காளிகள் திரளாக பங்கேற்றனர். ஆக.28ல் மங்கல இசை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரானைகள், ஆக.29ல் இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாரனை நடந்தன.
* சோழவந்தான்: மேலக்கால் பத்மாவதி, அலர்மேல்மங்கை சமேத வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி ஆக.29ல் கணபதி ஹோமம், புண்யகாவாசனம், ரக் ஷா பந்தனம், முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆக.30 ல் 2ம் கால யாக சாலை பூஜைகள், நாடி ஸந்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜெய்சங்கர், அர்ச்சகர் சங்கரநாராயணன் தலைமையில் பூஜைகள் நடந்தன. நிர்வாக அலுவலர் ராஜா, பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
