ADDED : ஆக 31, 2026 01:20 AM

ஆக்கிரமிப்பால் அவதி
அய்யர்பங்களா - மூன்று மாவடி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - செல்வம், அய்யர்பங்களா.
தெருநாய்கள் தொல்லை
மதுரை டோக் நகர், எச்.எம்.எஸ்., காலனி, கோ ஆப்டெக்ஸ் காலனியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. தனியாக செல்வோரை துரத்திச் சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - ராமநாதன், டோக் நகர்.
வேகத்தடை அவதி
மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோட்டில் அரை கி.மீ., செல்வதற்குள், 7 வேகத்தடைகள் உள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- - சண்முககுமரன், சம்மட்டிபுரம்.
மார்க்கெட் செயல்படுமா
மேலுார் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தினசரி மார்க்கெட் முழுமையாக செயல்பட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - மணவாளன், மேலுார்.
போக்குவரத்து நெரிசல்
கருப்பாயூரணியில் சக்கிமங்கலம் பிரிவில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இருந்தும்கூட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. ரோட்டோர வாகனம், கடைகளின் ஆக்கிரமிப்புகளே காரணம். போலீசார் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும்.
-ராசாத்தி, மதுரை
