ADDED : மார் 17, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு வாவிகரையில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி, நொண்டி கருப்புசாமி கோயில் 2ம் ஆண்டு களரி எடுப்பு விழா 3 நாட்கள் நடந்தது.
முதல் நாள் வான வேடிக்கையுடன் சாமி அழைப்பு, பொங்கல் வைத்து அபிஷேகம், சக்தி கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர். 2ம் நாள் சுவாமிக்கு அன்னாபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று வாண வேடிக்கையுடன் கனி மாற்றும் நிகழ்ச்சியும், பல்லயம் பிரிக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல் நடந்தது.
ஏற்பாடுகளை வண்டிக்கார வகையறாக்கள் செய்திருந்தனர்.

