/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் திருப்பணி திட்ட மதிப்பீடு தயாரிப்பு
/
கோயில் திருப்பணி திட்ட மதிப்பீடு தயாரிப்பு
ADDED : ஜன 01, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஐந்து உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தை மாதம் பாலாலயம் பூஜை நடத்த அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளனர். உப கோயில்களான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், கீழ ரத வீதி அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில், மலை அடிவாரம் பழநியாண்டவர் கோயில், மேலரத வீதி பாம்பலம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர்கள் சொந்த செலவில் செய்ய உள்ளனர்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா கூறுகையில், ''திருப்பணிகள், அதற்கான செலவுகள் குறித்து தற்போது கணக்கிடும் பணி நடந்து வருகிறது'' என்றார்.

