/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்
/
திருக்கோயில் ஓய்வு பணியாளர்கள் கூட்டம்
ADDED : டிச 14, 2025 08:06 AM
மதுரை: தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. மாநில சிறப்புத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைநிலை பென்ஷன் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டதாகவும், நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து துறைநிலை ஓய்வூதியதாரர்களுக்கும் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7850 வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்து விட்டால் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.30 ஆயிரம் கோயில் நிதியிலிருந்து வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டன.
மாநில தலைவர் சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். ஸ்ரீனிவாசரங்கன் நன்றி கூறினார்.

