ADDED : டிச 16, 2024 04:49 AM

அ நிறம் | அளவு
திருநகர் : மதுரை விளாச்சேரி குலாலர் தெரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமி நீளா, வெங்கடேச பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை நடந்தது.
கோயில் கோபுரம், விநாயகர் விமானம், மூலவர்கள் சக்தி கலை இறக்கப்பட்டு வரைபடங்களில் கலையேற்றம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திருப்பணிகள் முடிந்து 2025 பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக கோயில் நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் தெரிவித்தனர்.
