/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடமாடு மஞ்சுவிரட்டு பத்து பேர் காயம்
/
வடமாடு மஞ்சுவிரட்டு பத்து பேர் காயம்
ADDED : ஏப் 21, 2025 06:26 AM

அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாக்குடியில் உச்சி மாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா 5 நாட்கள் நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கிராம கோயில் காளையை தொடர்ந்து வடத்தில் பூட்டப்பட்ட ஒரு காளைக்கு 20 நிமிடமும், அதனை அடக்க 9 வீரர்களும் களம் இறங்கினர். பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ.பத்தாயிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கிரைண்டர் வழங்கி, கிராம மரியாதை செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர். காயமடைந்த 10ல் மூன்று பேர் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.