UPDATED : ஜூலை 11, 2026 09:09 PM
ADDED : ஜூலை 11, 2026 06:33 PM
மதுரை: ஒத்தகடை குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான டெனிகாய்ட், பீச் வாலிபால் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மங்களக்குடி பி.என். மெட்ரிக் பள்ளி போட்டி நடத்தியது. தாளாளர் நிர்மலா, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஏற்பாடுகளை செய்தனர்.
டெனிகாய்ட் முடிவுகள் ஆடவர் ஒற்றையர் 14 வயது பிரிவில் நேரு வித்யாசாலா பள்ளி புகழ் முதலிடம், பி.என். பள்ளி 2ம் இடம், 17 வயது பிரிவில் பி.என். பள்ளி முதலிடம், நேரு வித்யாசாலா 2ம் இடம், 19 வயது பிரிவில் பி.என். பள்ளி முதலிடம், ஒத்தகடை அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன.
ஆடவர் இரட்டையர் 14 வயது, 17 வயது பிரிவுகளில் நேரு வித்யாசாலா முதலிடம், மங்களக்குடி பி.என். பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் பி.என். பள்ளி முதலிடம், ஒத்தகடை அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன.
14 வயது மகளிர் ஒற்றையர் பிரிவில் பொய்கைகரைப்பட்டி அரசுப் பள்ளி முதலிடம், குருத்துார் ஆதிதிராவிடர் பள்ளி 2ம் இடம், 17 வயது பிரிவில் சாய்ராம் பள்ளி முதலிடம், மாத்துார் அரசுப் பள்ளி 2ம் இடம், 19 வயது பிரிவில் ஒத்தகடை அரசுப் பள்ளி முதலிடம், பி.என். பள்ளி 2ம் இடம் பெற்றன.
14 வயது இரட்டையர் பிரிவில் கேட்டி வில்காக்ஸ் பள்ளி முதலிடம், பொய்கரைப்பட்டி அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் மாத்துார் அரசுப் பள்ளி முதலிடம், பொய்கரைப்பட்டி அரசுப் பள்ளி 2ம் இடம், 19 வயது பிரிவில் ஒத்தகடை அரசுப் பள்ளி முதலிடம், பி.என். பள்ளி 2ம் இடம் பெற்றன.
பீச் வாலிபால் போட்டிகள் ஆடவர் பிரிவு பீச் வாலிபால் 14 வயது, 17, 19 வயது பிரிவுகளில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி முதலிடம், பி.என். பள்ளி 2ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு பீச் வாலிபால் 14 வயது, 17, 19 வயது பிரிவுகளில் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம், பி.என். பள்ளி 2ம் இடம் பெற்றன.
