ADDED : ஜன 26, 2025 05:42 AM
மதுரை : மதுரை யூனியன் கிளப்பில் ராமச்சந்திரன் நினைவு அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் 14 வயது ஆடவர், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆடவர் பிரிவு போட்டி முடிவுகள்
முதல் காலிறுதிப் போட்டியில் கர்நாடகாவின் விஷ்ணுராஜன் 9 - 4 புள்ளிகளில் தமிழகத்தின் அமன் மாத்யூவை வீழ்த்தினார். 2வது காலிறுதியில் கேரளாவின் நயன் கிருஷ்ணா 9 - 0 புள்ளிகளில் தமிழகத்தின் நிஜேஷ் நிகாமை வீழ்த்தினார். 3வது காலிறுதியில் தமிழகத்தின் தன்வின் 9 - 2 புள்ளிகளில் அதன்யனை வீழ்த்தினார். 4வது காலிறுதியில் தமிழகத்தின் நிகில் 9 - 2 புள்ளிகளில் அகிலனை வீழ்த்தினார்.
முதல் அரையிறுதிப் போட்டியில் விஷ்ணுராஜன் 9 - 5 புள்ளிகளில் நயன் கிருஷ்ணாவை வீழ்த்தினார். தன்வின் 9 - 3 புள்ளிகளில் நிகிலை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் விஷ்ணுராஜன், தன்வின் மோதுகின்றனர்.
மகளிர் பிரிவு
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் தகுதி பெற்றனர். முதல் காலிறுதிப் போட்டியில் சாதனா 9 - 2 புள்ளிகளில் கனிஷ்காவை வீழ்த்தினார். 2வது காலிறுதியில் ஐஸ்வர்யா 9 - 7 புள்ளிகளில் பவுசில் கிதயாவை வீழ்த்தினார். 3வது காலிறுதியில் ஆதிரை 9 - 0 புள்ளிகளில் அஸ்விதாவை வீழ்த்தினார். 4வது காலிறுதியில் இனியா 9 - 7 புள்ளிகளில் தமிழகத்தின் ஹன்ஷி ஜெேஷாவை வீழ்த்தினார்.
முதல் அரையிறுதிப் போட்டியில் சாதனா 9 - 4 புள்ளிகளில் ஐஸ்வர்யாவை வீழ்த்தினார். அடுத்த அரையிறுதியில் ஆதிரை 9 - 2 புள்ளிகளில் இனியாவை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் சாதனா, ஆதிரை மோதுகின்றனர்.

