/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூன்றாண்டாக வறண்டு கிடக்கும் தென்பழஞ்சி கண்மாய்
/
மூன்றாண்டாக வறண்டு கிடக்கும் தென்பழஞ்சி கண்மாய்
ADDED : அக் 16, 2024 04:35 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தென்பழஞ்சி கண்மாய் மூன்று ஆண்டுகளாக வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மானாவாரி கண்மாயான இக்கண்மாய் அதிக மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். இக்கண்மாய் தண்ணீர் மூலம் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
2020ல் பெய்த கன மழையால் கண்மாய் நிரம்பியது. அதன் பின்பு வறண்டு கிடக்கிறது. இந்தாண்டு சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தென்பழஞ்சி அருகே வேடர் புளியங்குளம் வரை நல்ல மழை பெய்கிறது. ஆனால் தென்பழஞ்சியில் 10 முதல் 20 நிமிடங்கள் துாறல் மட்டுமே விழுகிறது.
கண்மாய் வறண்டு கிடப்பதால் பலர் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர். ஏராளமானோர் வெளியில் கட்டட வேலைக்கு செல்கின்றனர். விவசாயம் மட்டுமே தெரிந்தவர்கள் ஆடு, மாடு வளர்த்து வருமானம் ஈட்டுகின்றனர். இந்தநிலை தொடர்ந்தால் விவசாயம் முடங்கிவிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். வைகை அணை தண்ணீரைக் கொண்டுவர 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என தெரிவித்தனர்.