ADDED : அக் 08, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தானில் பாரத ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மையம் உள்ளன.
'பார்க்கிங்' வசதி இல்லாததால் சோழவந்தான் -- மதுரை ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வங்கிக்கு செல்கின்றனர். இதனால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. நடந்து, வாகனங்களில் செல்வோர் சிரமமடைகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுத்து டூவீலர்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் வங்கியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.