ADDED : பிப் 07, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகரில் உணவுப் பாதுகாப்பு துறை, போலீஸ் துறை சார்பில் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை சோதனை செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மதுரை நகரில் 172 முறை 2998 கடைகளை சோதனை நடத்தினர்.
இதில் 931 வழக்ககள் பதிவு செய்து 955 பேர் கைது செய்யப்பட்டனர். 2938 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் 106 கடைகளை சட்டவிரோதமாக தடை செய்த குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுவரை 4.20 லட்சம் அபராதமாக விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

