ADDED : ஜன 16, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (ஜன.16) காலை 10:40 முதல் 10:50 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஜன.24 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். ஜன.25 காலை தீர்த்தவாரி, அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் ராமசாமி செய்து வருகின்றனர்.