sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி

/

 குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி

 குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி

 குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி


ADDED : நவ 16, 2025 04:22 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழ் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, தாமரை போன்ற டிவி தொடர்களில் நாயகியாக வலம் வருபவர் நடிகை தனலெட்சுமி. அசத்தும் பேரழகால் வசீகரிக்கும் இவர், தனது அயராத உழைப்பால் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார்.

இவரது பயணம் பற்றி கூறியதாவது...

சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி. தந்தை கண்ணன், தாயார் மீனாட்சி, சகோதரி சாயுஜியா. சைக்காலஜி படித்திருக்கிறேன்.

பிரியமுடன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தை பொறந்தாச்சு, கிழக்கும் மேற்கும், சத்திரபதி, ஜாம்பவான், இன்பா, சிங்கக்குட்டி, முதல் இடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். பழம்பெரும் இயக்குனர்களான ஏ.சி. திருலோகசந்தர், எஸ்.பி. முத்துராமன், கே.பாலச்சந்தர் போன்றோர் படங்களில் பணியாற்றியதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இது என் நடிப்புத் திறனை மேலும் செம்மைப்படுத்தியது.

மங்கை, அப்பா அம்மா, சொந்தம், வாழ்க்கை, நம்பிக்கை, அண்ணாமலை, வீட்டுக்கு வீடு லாட்டி, மிஸ்டர் அண்ட் மிசஸ் (கிரேஸி மோகன்), காவ்யா அஞ் சலி தொடர்களிலும் நடித்துள்ளேன்.

ரெட்டை ரோஜா, ரஞ்சிதமே, பொன்னி சி/ஓ ராணி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறேன். இவை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. வெப் சீரிஸ்களில் இன்னும் நிறைய நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். திரைப்பட வாய்ப்பு வந்தால் அஜித்குமார், நயன்தாராவுடன் நடிக்க ஆசை. சினிமாவில் சாதிக்க விரும்பும் இளம்பெண்களுக்கு சொல்ல விரும்புவது இது தான்...

எப்போதும் மனதையும், உடலையும் 'பிட்'ஆக வைத்துக் கொள்ள வேண்டும். நடிப்பு தவிர நடனம், பாடுவது போன்ற பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us