தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜல்லிக் கற்களாக மாறிய தார்ரோடு

ஜல்லிக் கற்களாக மாறிய தார்ரோடு

ஜல்லிக் கற்களாக மாறிய தார்ரோடு


UPDATED : அக் 26, 2026 12:35 AM

ADDED : அக் 25, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:35 AM ADDED : அக் 25, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: புதுப்பட்டி ரோடு சிதிலமடைந்து ஜல்லிக் கற்களாக மாறியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.

திருவாதவூர் - புதுப்பட்டி ரோட்டில் வெள்ளமுத்தன்பட்டி, உலகுபிச்சன்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களில் 2,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களுடைய படிப்பு, வேலை, வயல் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செல்கின்றனர்.

டி.மாணிக்கம்பட்டி கிராம மாணவர்களும் பள்ளிக்கு செல்கின்றனர். மக்களின் போக்குவரத்திற்காக 7ஆண்டுக்கு முன் அமைத்த தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறிவிட்டது. அவை நடந்து செல்வோர் காலில் குத்துவதால் காயமும், டூவீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.

ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் ரோட்டில் பயணிக்க அச்சமடைந்து, வீட்டிற்குள் முடங்கி கிடப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us