ADDED : செப் 27, 2024 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: நாவினிபட்டி, நா.கோவில்பட்டி மொட்டை பிள்ளையார் கோயில் ரோட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதியில் தார் ரோடு அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாவதால் ஜல்லிகற்கள் வெளியே தெரிகிறது.
ராஜாங்கம்: ஜல்லிகற்கள் வெளியே தெரிவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மக்கள் கால்களில் கற்கள் குத்துவதால் காயம் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் வர மறுப்பதால் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். கற்கள் வெளியே தெரிவதால் டூவீலர்களில் செல்லும் போது தடுமாறி கீழே விழுவதால் விபத்து ஏற்படுகிறது. மக்களின் நலன் கருதி புதிய ரோடு அமைக்க வேண்டும் என்றார்.
ஊராட்சி தலைவி தவுலத்பீவி கூறுகையில்,ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.