/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையில் ஐயப்பனுக்கு நடந்த ஆராட்டு விழா
/
வைகையில் ஐயப்பனுக்கு நடந்த ஆராட்டு விழா
ADDED : டிச 06, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே ஐயப்பன் சுவாமி கோயில் உள்ளது.
நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமி சப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்கு, மேலரத வீதி வழியாக பக்தர்கள் சரண கோஷத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அர்ச்சகர் சண்முகவேல் சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களை செய்தார்.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு வைகையில் ஆராட்டு விழா நடந்தது. பின்னர் கோட்டைவாசல், காளியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் ரோடு வழியாக கோயில் வந்தடைந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழா குழுவினர் சந்தோஷ், தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.