/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு விவசாய சங்கம் முடிவு
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு விவசாய சங்கம் முடிவு
பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு விவசாய சங்கம் முடிவு
பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு விவசாய சங்கம் முடிவு
ADDED : டிச 06, 2025 10:17 AM
மேலுார்: மேலுாரில் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 2006ல் 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றமும், 2014 ல் கண்காணிப்பு குழுவின் 152 அடியாக உயர்த்தும் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வைகை அணையை துார்வாரவும், முல்லைப் பெரியாறு திட்ட பரா மரிப்பு, புதுப்பிக்கும் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயி களின் வாழ்வாதாரம் காக்க அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை இயக்கவும், பொங்கலுக்கு இரண்டு கரும்புகளை விவசாயி களிடம் நேரடியாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் திறக்கவும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும், மாநில அரசு ஊக்கத் தொகையை உயர்த்தவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தலைவர் பாண்டி, விவசாயிகள் கருப்பணன், அசோக்குமார், இளங்கோ, கல்லாணை செய்திருந்தனர்.

