நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் கொன்னை மஸ்தான் பள்ளிவாசலில் சந்தன உரூஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இங்கு ஜோடிக்கப் பட்ட சந்தன உரூஸ் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செயலாளர் ஷாஜகான், தலைவர் சுலைமான், பொருளாளர் சாகுல் ஹமீது, நிர்வாக குழு உறுப்பினர்கள், தர்ஹா ஷரிப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

