/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரோகரா கோஷங்களுக்கிடையே அசைந்தாடி வந்த ஆறுமுகன் தேர் திருப்பரங்குன்றத்தில் பரவசம்

ADDED : மார் 20, 2025 05:48 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த பங்குனித் திருவிழா தேரோட்டத்தில், அரோகரா கோஷங்களுக்கு இடையே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தேர் நான்கு மணி நேரத்திற்கு பின் நிலையை அடைந்தது.
நேற்று காலை 5:30 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, முத்தங்கி அலங்காரம் நடந்தது. பின் ரோஸ் மற்றும் பச்சை பட்டால் பரிவட்டம் கட்டப்பட்டு கோயில் முன்பு நிறுத்தியிருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர்.
கருப்பண்ண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சாரியார் சுவாமிநாதன் தேரில் ஏறி வெள்ளைக் கொடியை அசைத்ததும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 6:29 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பாடானது. விநாயகர் எழுந்தருளிய சட்டத்தேர் முன்செல்ல, பெரிய வைரத்தேர் கிரிவலப்பாதையில் பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு இடையே ஆடி அசைந்து வலம் வந்தது. காலை மணிக்கு 10:50 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது.
பின்பு கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா விமல் பங்கேற்றனர்.