ADDED : அக் 19, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கண்மாய் கரை பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இதன் அருகே உள்ள கிராம சேவை மைய கட்டடத்தை மகளிர் சுய உதவி குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி மைய கட்டடம் முதல் கண்மாய் கரை வரை கருவேலம் மரங்கள் புதராக வளர்ந்துள்ளன. மேலும் ஊராட்சி குப்பை குழிகள், மண்புழு உர தயாரிப்பு கூடம் பயன்பாடின்றி உள்ளது.
கண்மாய் மற்றும் முட்புதர் பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் படை எடுக்கும் அபாயம் உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இப்பகுதியை சுத்தம் செய்தால் மாணவர்கள் பாதுகாப்புடன் விளையாட முடியும்.
எனவே இங்குள்ள புதர்களை ஊராட்சி நிர்வாகம் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.