ADDED : மார் 15, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: கடலுார் மாவட்டம் ஆவட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைநாதன் 40; மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் சிற்றரசன் 15, மதியழகன் 12.
நேற்று மாலை இருவரும் ஏரிக்கு சென்றனர். அவர்களது தந்தை முல்லைநாதன் தேடிச் சென்றபோது சிற்றரசன், மதியழகன் இருவரும் ஏரியில் மிதந்தனர். அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

