/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குண்டும் குழியுமான ஊத்துக்குளி ரோடு
/
குண்டும் குழியுமான ஊத்துக்குளி ரோடு
ADDED : ஆக 26, 2025 03:53 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் ரோடு மிக மோசமாக சேத மடைந்து போக்கு வரத்திற்கு சிரமமாக உள்ளது என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
சிங்கதுரை கூறிய தாவது:
சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரோட்டின் இருபுறமும் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து குழிகள் மூடப்பட்டு ரோடு சீரமைக்கப்படாமல் விடப்பட்டது. இதனால் ஊருக்குள் செல்லும் ரோடு மேடு பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.
மேலும் டூவீலர் மட்டுமே செல்லும் அளவிற்கு ரோடு இரு புறமும் குறுகி ஒற்றையடி பாதை போன்று காட்சி யளிக்கிறது. நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளங்கள் தெரியாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.