/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சிகளில் பணிகளை முடுக்கி விட்ட முதல்வர் ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
/
ஊராட்சிகளில் பணிகளை முடுக்கி விட்ட முதல்வர் ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
ஊராட்சிகளில் பணிகளை முடுக்கி விட்ட முதல்வர் ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
ஊராட்சிகளில் பணிகளை முடுக்கி விட்ட முதல்வர் ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
ADDED : அக் 15, 2025 07:07 AM
மதுரை : தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் போர்க்கால அடிப்படையில் ஏதாவது 3 பணிகளை தேர்வு செய்து முடித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் அக்., 11 ல் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளிலும் காணொலி காட்சி மூலம் பேசினார்.
அந்தந்த கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளவற்றில் குடிநீர், தெருவிளக்குகள் அமைத்தல், வடிகால் பணிகள் போன்றவற்றில் 3 பணிகளை தேர்வு செய்ய வேண்டும். அதனை ஒரு மாதத்திற்குள் விரைவாக முடித்து அறிக்கையை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இரு நாட்களுக்கு முன் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் இதுகுறித்து அதிகாரிகள் இரவுடன் இரவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்கள் அந்தந்த ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளுக்கு விரைந்து முடிக்குமாறு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதையடுத்து ஊராட்சி செயலர்கள் இப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது: சில மாதங்களில் தேர்தல் நடப்பதால் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஊராட்சியும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிய, ஏதாவது 3 பணிகளை தேர்வு செய்து முடிக்க வேண்டும். இப்பணிகளை ஊராட்சி நிதியில் இருந்து முடிக்கும் படி தெரிவித்துள்ளனர். பத்து மாதங்களாக ஊராட்சி தலைவர் பதவி இல்லாததால் ஊராட்சியில் நிதி இருப்பு உள்ளது. நீண்ட கால திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் விரைந்து முடிக்கும் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர் என்றார்.