/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமும் அரசு துறை ஊழியர்கள் போராட்டம்: அல்லோலப்படும் கலெக்டர் அலுவலகம்
/
தினமும் அரசு துறை ஊழியர்கள் போராட்டம்: அல்லோலப்படும் கலெக்டர் அலுவலகம்
தினமும் அரசு துறை ஊழியர்கள் போராட்டம்: அல்லோலப்படும் கலெக்டர் அலுவலகம்
தினமும் அரசு துறை ஊழியர்கள் போராட்டம்: அல்லோலப்படும் கலெக்டர் அலுவலகம்
ADDED : பிப் 12, 2026 05:56 AM

மதுரை: மதுரையில் தினமும் மூன்று அல்லது நான்கு அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டங்களால் கலெக்டர் அலுவல கமே பரபரப்பாக உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று 6வது நாளாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம், மறியலில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான், ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில தலைவர் மேனகா பங்கேற்றனர். இதனால் சத்துணவு பணிகளை காலை உணவு திட்ட பணியாளர்களை வைத்து அரசு சரிசெய்து வருகிறது.
வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 3 நாட்களாக மறியலில் ஈடுபட்டு கைதாகினர். நேற்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
கிராம நிர்வாக பணிகள் பாதித்தன.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினரும் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர். காலிப் பணியிடம் நிரப்புதல், ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு, சிறப்பு நிலை வழங்குதல் கோரிக்கைகளை மாவட்ட தலைவர் சந்திரபோஸ், மாநில செயலாளர் பாலாஜி, பொருளாளர் விஜயபாஸ்கர், பொருளாளர் அமுதரசன் தலைமையில் வலியுறுத்தினர்.
உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் வருவாய்த்துறை கூட்டமைப்பினர் (பெரா) கலெக்டர் அலுவலகம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன்அப்துல் காதர், ரகுபதி, ஜெயபாஸ்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகே கைதாகினர். போராட்டங்களால் கலெக்டர் அலுவலகம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து பாதித்தது.
அரசு ஊழியர்கள் கூறுகையில், ''தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ஏதாவது தீர்வு கிடைக் குமா என்ற எதிர்பார்ப் பில் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளன'' என்றனர்.

