/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
10 ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த சமுதாயக்கூடம்; மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு

ADDED : ஜூலை 24, 2025 04:51 AM

மதுரை: மதுரையில் 10 ஆண்டுகளாக மாநகராட்சி வருவாய் இனங்களில் இடம் பெறாத சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட 54வது வார்டு தெற்கு வெளிவீதி குப்பு பிள்ளை தோப்பு 2வது தெருவில் அ.தி.மு.க., ஆட்சியில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. தி.மு.க.,வை சேர்ந்த நன்னா இருமுறை கவுன்சிலராக இருந்தார். தற்போது நுார்ஜஹான் உள்ளார். அவர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் 'தனது வார்டில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். அதை கமிஷனர் சித்ரா பரிசீலனை செய்த போது அந்த வார்டில் ஏற்கனவே 1991ல் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் இருப்பது தெரிந்தது.
அதிகாரிகள் விசாரித்தபோது அந்த சமுதாயக் கூடம் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்ததும், அதன் மின் இணைப்பு தனி நபர் பெயருக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது. 10 ஆண்டுகளாக அந்த சமுதாயக் கூடத்தில் கட்டணம் பெற்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் மாநகராட்சிக்கு செலுத்தப்படவில்லை என தெரியவந்தது. கமிஷனர் சித்ரா உத்தரவுபடி சமுதாய கூடம் மீட்கப்பட்டது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னாள் கவுன்சிலர் ஒருவர் அந்த சமுதாயக் கூடத்தை தனி நபர் பெயருக்கு மாற்றி தனியார் சமுதாயக் கூடம் போல் அவரே நிர்வாகம் செய்து வந்தார். அது மீட்கப்பட்டு, 'மாநகராட்சி சமுதாயக் கூடம்' என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.