/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் ஒரு மாதத்தில் ரூ.57 கோடி சொத்து வரி வசூல்; சலுகைக்கு கிடைத்தது 'சாதனை' பலன்

ADDED : மே 10, 2025 06:10 AM

மதுரை : மதுரையில் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஏப்ரலில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூலித்து மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
மாநகராட்சி 100 வார்டுகளிலும் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட 3.48 லட்சம் கட்டடங்கள் உள்ளன. இவற்றில் ரூ.பல கோடி சொத்து வரி நிலுவை இருந்தன. இதுகுறித்து கமிஷனர் சித்ரா கவனத்திற்கு வந்தது. உதவி கமிஷனர் (வருவாய்) மாரியப்பன் தலைமையில் பில் கலெக்டர்கள் குழு 100 வார்டுகளிலும் களம் இறக்கிவிடப்பட்டனர்.
ஒவ்வொரு நாளும் வரி வசூல் இலக்கு நிர்ணயித்து, குழுவினருடன் கமிஷனர் ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கினார். ஏப்ரலில் 2024 - 2025க்கான சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரி சலுகை (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) அளிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. இதைபயன்படுத்தி பலர் நிலுவையுடன் வரி செலுத்தினர். ஒரே மாதத்தில் ரூ.57 கோடி வரி வசூல் என்பது மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதன்முறை.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: 5 சதவீதம் சலுகை அறிவிப்பு குறித்து மூன்றரை லட்சம் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வசூல் குழுவினரும் வசூல் இலக்கை சரியாக செய்தனர். இதன் மூலம் ரூ.9.10 கோடி சொத்துவரி நிலுவையும், ரூ.47.31 கோடி நடப்பு சொத்து வரியும் வசூலிக்கப்பட்டது. வரிவசூல் குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.