sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சோழவந்தானை சுழற்றிய சூறாவளி மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

/

 சோழவந்தானை சுழற்றிய சூறாவளி மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

 சோழவந்தானை சுழற்றிய சூறாவளி மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

 சோழவந்தானை சுழற்றிய சூறாவளி மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன


ADDED : மார் 19, 2026 05:19 AM

Google News

ADDED : மார் 19, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தானில் பெய்த சூறாவளி மழையால் பலநுாறு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, தென்னை பலத்த சேதம் அடைந்தன.

இங்கு நேற்று முன்தினம் (மார்ச் 17) இரவு சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் அடியோடு சாய்ந்தன. பேட்டையில் மரம் சாய்ந்து பள்ளியில் விழுந்ததில் கட்டடம் சேதம் அடைந்தது. பல ஏக்கர்நெல், வாழை, தென்னை, வெற்றிலை சேதமடைந்ததால் விவசாயிகள் சோகமடைந்தனர்.

வாழை விவசாயி கண்ணன் நகையை அடகு வைத்து, நிலத்தை குத்தகைக்கு வாங்கி வாழை பயிரிட் டேன். 13 மாதங்களாக நன்கு பராமரித்து வந்தேன். வாழைத்தார் அறுவடைக்கு தயாரான நிலையில் சூறாவளி, மழை மரங்களைச் சாய்த்து விட்டது. ரூ.5 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வெற்றிலை விவசாயி ராஜேந்திரன் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து வெற்றிலை பயிரிட்டேன். ஆலங்கட்டி மழையால் வெற்றிலைகள் சேதமடைந்து வீணாகிவிட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெற்றிலை பறிக்க தயாராக இருந்த நிலையில் முழுவதுமாக சேதமடைந்து விட்டது.

தென்னை விவசாயி விமல் உறவினர்களுடன் இணைந்து 15 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். சூறாவளியால் 500 க்கும் மேற்பட்ட கன்றுகள் அழிந்து விட்டன.

பல முதிர்ந்த மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. ரூ.பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us