/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெருந்திரள் முறையீடு நடத்த வருவாய் அலுவலர்கள் முடிவு அக்.29, நவ.26 ல் போராட்டம்
/
பெருந்திரள் முறையீடு நடத்த வருவாய் அலுவலர்கள் முடிவு அக்.29, நவ.26 ல் போராட்டம்
பெருந்திரள் முறையீடு நடத்த வருவாய் அலுவலர்கள் முடிவு அக்.29, நவ.26 ல் போராட்டம்
பெருந்திரள் முறையீடு நடத்த வருவாய் அலுவலர்கள் முடிவு அக்.29, நவ.26 ல் போராட்டம்
ADDED : அக் 28, 2024 04:59 AM
மதுரை: 'நெல்லை கலெக்டர் மீது நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக' மதுரை வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவர் கோபி, செயலளர் முகைதீன் அப்துல்காதர் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: நெல்லை மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகள் குறித்து பெருந்திரள் முறையீடு இயக்கம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் அரசு அலுவலர்களின் வயது, அனுபவத்திற்கு மதிப்பளிக்காமல் ஆய்வுக் கூட்டங்களில் வசைபாடி வருகிறார். பெண் ஊழியர்களையும் கண்ணியக்குறைவாக நடத்துகிறார்.
இதைக் கண்டித்து தென்மண்டல தர்ணா போராட்டம் நடத்தியும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் வருவாய் அலுவலர்கள் மனவருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மை துறையில் இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களின் பெயர்களை மாற்றம் செய்து 2016 ல் அரசாணை வெளியிடப்பட்டது. எனவே உறுதியளித்தபடி விதித்திருத்தம் செய்து அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., நிலைகளில் இருந்து பதவி உயர்வு பெறுவது 2 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. விரைவில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணிநியமனத்திற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். அரசின் சிறப்பு திட்டங்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான முழுப்புல பட்டா மாறுதல் வழங்கும் அதிகாரம் மண்டல துணைத்தாசில்தாரிடம் இருந்து பிரிந்து, தலைமையிடத்து துணைத்தாசில்தாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூடுதல் பணிப்பளு ஏறபடுவதால், முந்தைய நிலையே தொடர வேண்டும், என தெரிவித்துள்ளனர். இவற்றை வலியுறுத்தி அக்.29 ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம், அடுத்த கட்டமாக நவ.26 முதல் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த செயற்குழு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.