/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்க 'திசா' கூட்டத்தில் வலியுறுத்தல் இன்னும் 'பிளான் அப்ரூவல்' பெறவில்லை
/
பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்க 'திசா' கூட்டத்தில் வலியுறுத்தல் இன்னும் 'பிளான் அப்ரூவல்' பெறவில்லை
பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்க 'திசா' கூட்டத்தில் வலியுறுத்தல் இன்னும் 'பிளான் அப்ரூவல்' பெறவில்லை
பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறக்க 'திசா' கூட்டத்தில் வலியுறுத்தல் இன்னும் 'பிளான் அப்ரூவல்' பெறவில்லை
ADDED : செப் 27, 2025 04:19 AM
மதுரை: 'மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (திசா) வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (திசா) தலைவர் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் நடந்தது. எம்.பி.,க்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எஸ்.பி., அரவிந்த், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், அய்யப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வானதி, துணைமேயர் நாகராஜன் பங்கேற்றனர்.
தங்கத்தமிழ்ச்செல்வன், 'சோழவந்தான் ஸ்டேஷனில் ரயில்கள் நிற்க வேண்டும். வாலாந்துாரில் 40 ஏக்கர் ரயில்வே நிலம் புதர்மண்டி கிடக்கிறது. இங்கும் ரயில் நிற்கவேண்டும். அப்பகுதியில் சப்வே அமைக்க வேண்டும்' என்றார். பதிலளித்த ரயில்வே அதிகாரி மோகனப்பிரியா 'ரயில்வே போர்டின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்' என்றார்.
அமைச்சர் மூர்த்தி, 'மாடக்குளம் கண்மாய் பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்' என்றார்.
பதிலளித்த நகாய் அதிகாரி, 'மதுரை - கொச்சி நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக உள்ளது. இப்பகுதியில் ரோடு பணி நடக்கும்போது அதையும் கவனிப்போம்' என்றார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி., பேசுகையில், 'மாநகராட்சி புதிய விரிவாக்க பகுதிகளான திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்' என்றார்.
வெங்கடேசன் எம்.பி., பேசுகையில், 'பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஷாப்பிங் மால் எப்போது செயல்பாட்டுக்கு வரும்' எனக்கேட்டார்.
கமிஷனர் சித்ரா கூறுகையில், 'இதுவரை பிளான் அப்ரூவல் பெறப்படவில்லை. மின் இணைப்பு உட்பட பணி முடிந்த சான்று அளிக்க வேண்டியுள்ளது' என்றார்.
கலெக்டர் கூறுகையில், ''பல கோடி ரூபாய் செலவிட்டு வீணாக உள்ளது. இதற்கு விதிவிலக்கு அல்லது அப்ரூவல் பெற ஏற்பாடு செய்யுங்கள். நகரமைப்பு அதிகாரிகள் அதற்கு உதவுங்கள்' என்றார்.