ADDED : மார் 22, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுாரில் பாண்டியர்கள் கால கற்கோயிலான சிவாலயம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதைந்து இருந்தது.
தற்போது சீரமைப்பு பணி நடக்கிறது. சிதைந்து கிடந்ததை ஒழுங்குபடுத்தி எடுத்துக்கட்டி காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயில் என பெயரிட்டு கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதன் வளாகத்தில் தேனி பழனிசெட்டியபட்டி ஓதுவார் பால்வண்ணன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டப்பநாயக்கனுார் ஜமீன்தார் பாண்டியர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆதிநாராயணன், பாலமுருகமகாராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் வரதராஜன், சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தனர்.