/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கம் இனி 24 மணி நேரமும் துாய்மை பணி
/
மாநகராட்சியில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கம் இனி 24 மணி நேரமும் துாய்மை பணி
மாநகராட்சியில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கம் இனி 24 மணி நேரமும் துாய்மை பணி
மாநகராட்சியில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கம் இனி 24 மணி நேரமும் துாய்மை பணி
ADDED : ஆக 12, 2025 06:10 AM
மதுரை, : மதுரை மாநகராட்சியில் 'நம் துாய்மை; நம் பெருமை' என்ற கோஷத்துடன் 24 மணிநேரமும் துாய்மை பணிகள் மேற்கொள்ளும் வகையில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் தினமும் 850 டன் குப்பை சேருகிறது. வார்டுவாரியாக தரம் பிரித்து சேகரிக்கின்றனர். காலையில் துாய்மைப்படுத்தினாலும் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என மக்கள் நடமாட்ட பகுதிகளில் குப்பை சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது துாய்மை பணியாளர்கள் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை பணி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், மண்டலம் வாரியாக கூடுதலாக 10 பணியாளர்கள், தன்னார்வலர்கள், குப்பை அள்ள டிராக்டர் உபகரணங்கள் வசதி ஏற்படுத்தி, 24 மணிநேரமும் துாய்மை பணி மேற்கொள்ள கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக 'நம் துாய்மை நம் பெருமை' என்ற கருத்தில் 'எழில் கூடல்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிக குப்பை சேரும் இடங்களை (ஹாட் ஸ்பாட்) கண்டறிந்து 24 மணி நேரமும் அகற்ற ஏற்பாடு செய்துள்ளார்.
நகர்நல அலுவலர் இந்திரா கூறியதாவது: மாநகராட்சியில் வார்டுகளை 25 டிவிசன்களாக பிரித்து, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், முக்கிய ரோடுகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் என 24 மணிநேரமும் குப்பை அதிகம் சேரும் 25 இடங்கள் (ஹாட் ஸ்பாட்) கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த 'ஹாட் ஸ்பாட்'களை பிற இடங்களுக்கு முன் உதாரணமாக துாய்மைப்படுத்தும் 'எழில்கூடம்' திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பின் வார்டு வாரியாக விரிவுபடுத்தி அனைத்து வார்டுகளையும் அழகுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக காலை, மதியம், இரவு என இரண்டு முறை துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். குடியிருப்பு சங்கங்கள், சமூக ஆர்வலர்களை இணைத்தும் ஹாட் ஸ்பாட் இடங்களை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.