நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஜூன் 15 ல் கள்ளந்திரி இருபோக சாகுபடிக்கான முதல்போக பரப்புக்கு முல்லைப் பெரியாறு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், உரங்கள் இருப்பு போதுமான அளவில் உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் மொத்தமாக 3300 டன் யூரியா இருப்பு உள்ளது. டி.ஏ.பி., 690 டன், பொட்டாஷ் 904 டன், காம்ளக்ஸ் 3200 டன், சூப்பர் பாஸ்பேட் 433 டன் இருப்பு உள்ளது. சங்கங்கள், தனியார் கடைகளில் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும், விலை குறித்து அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தால் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றார்.