தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சினிமா...

 சினிமா...

 சினிமா...


ADDED : செப் 22, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஜெயிலர் 2'வில் வில்லியாக வித்யாபாலன்

நெல்சன், ரஜினியின் கூட்டணியில் அக்., 15ல் வெளியாகும் படம் 'ஜெயிலர் 2'. முதல் பாகத்தில் நடித்தவர்கள் தாண்டி புதிதாக சிலரும் நடித்துள்ளனர். அவர்களின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிறது. சுராஜ் வெஞ்சராமுடு, எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து 'காந்தா' என்ற ரோலில் வில்லியாக நடிகை வித்யாபாலன் நடித்துள்ள அறிவிப்பு வெளியானது. சிகரெட் பிடித்தபடி வெளியான அவரின் அறிமுக வீடியோ வைரலானது.

'நந்தன்' 2ம் பாகம் அறிவிப்பு

இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'நந்தன்'. தலித் பஞ்சாயத்து தலைவரின் வாழ்வை அழுத்தமாக பதிவு செய்தது. இதன் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளனர். சசிகுமாரே இதிலும் தொடருகிறார். சரவணன் கூறுகையில், ''நந்தன் 2 விலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்னையை வைத்து அழுத்தமான படைப்பாக இதன் கதை உருவாகியுள்ளது” என்றார்.

'மைசா' டீசர் : அசத்தும் ராஷ்மிகா

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்துள்ள 'மைசா' படம் நவ., 27ல் ரிலீஸாகிறது. இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதில் பழங்குடியின பெண்ணாக களமிறங்கி உள்ளார் ராஷ்மிகா. பைக் சேசிங், அண்டர் வாட்டர், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் என ஆக் ஷனிலும் அசத்தி உள்ளார்.

சூரிக்கு முதல் ரூ.100 கோடி படம்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மண்டாடி' படம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலில் ரூ.100 கோடி சாதனை புரிந்து சூரிக்கு முதல் 100 கோடி வசூல் படம் என்ற பெருமையை தந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் வெற்றியை தனது சொந்த ஊரான மதுரை, ராஜாக்கூரில் உள்ள தனது வீட்டில் படக்குழுவினரை அழைத்து வந்து குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி கொண்டாடினார் சூரி.

மீண்டும் தனுஷ் - சாய் அபயங்கர் கூட்டணி

இளம் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளராக மாறி உள்ளார் சாய் அபயங்கர். தற்போது தனுஷின் 'ஓம்' படத்திற்கு இசையமைப்பவர் அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56வது படத்திற்கும் இசையமைக்க உள்ளார். தமிழரசன் பச்சமுத்துவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, 'கேக்குறாங்க சொல்லுங்க பிரதர்' என சாய் அபயங்கர் பதிவிட்டுள்ளார். அதற்கு, “பொட்டு வச்ச தங்கக்குடம்' பாட்டுக்கு 'அன்பிளக்ட் வர்ஷன்' பண்ணி தா... நீதான்னு சொல்லிடறேன்” என்று தமிழரசன் பதிலளித்துள்ளார்.

'டிரோல்' : கோபத்தில் சட்டையை கழற்றிய சல்மான்

ஹிந்தி நடிகர் சல்மான் தான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சட்டையை கழற்றி அதிரடி காட்டினார். தனது தோற்றம் மற்றும் நடிகை கத்ரீனாவின் தோற்றம் குறித்து டிரோல் செய்தவர்களுக்கு பதிலடியாக அவர் இப்படி செய்துள்ளார். சல்மான் கூறுகையில், ''வலைதளங்களில் நானும் டிரோல் செய்யப்படுகிறேன். எனக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். ஆமாம் 60 வயதாகிறது. எல்லா நேரத்திலும் 'மைனே பியார் கியா' படம் போல் இருக்க முடியாது. கர்ப்பமான ஒருவரைக் கூட கேலி செய்கிறார்கள். கர்ப்பத்திற்கு பின் பெண்கள் எடை கூடுவது இயல்பானது'' என்றார்.

இந்தவார ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

கடந்த வாரம் தமிழில் 10 படங்கள் ரிலீஸாகின. இவற்றில் பல படங்கள் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்கவில்லை. இந்தவாரம் செப்., 25ல் அசோக் செல்வனின் 'அன்பில் அவன்', கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி', கங்கை அமரனின் 'லெனின் பாண்டியன்', ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2' ஆகிய படங்களுடன் 'இ1, கிராண்ட் மாஸ்டர்' என 6 படங்கள் ரிலீஸாகின்றன. தெலுங்கு படமான நானியின் 'தி பாரடைஸ்' செப்., 24ல் தமிழில் டப் ஆகி வெளியாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us